Tamil New Year Celebration

அன்புள்ள கொரியாவாழ் தமிழ் நண்பர்களே!!!

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பொன் மொழிக்கு ஏற்றார்போல் கடல் கடந்து வந்து இருக்கும் கொரியா வாழ் தமிழ் நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த கொரியா தமிழ்நண்பர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் தங்களின் அனுபவங்கள், மகிழ்ச்சி, இன்பம், துக்கம், வாழ்க்கைமுறை, செயல்பாடு, உதவி, பயனுள்ள தகவல்கள் என அனைத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு பாலமாக இந்த அமைப்பு அமையும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

வாழ்க தமிழ்! வளர்க கொரியா வாழ் தமிழ் மக்கள்!!

உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
– திருவள்ளுவர்